3 நிறங்களில் அறிமுகமாகிறது ஹீரோவின் புதிய எக்ஸ்ட்ரீம் 160R
இருசக்கர வாகன தயாரிப்பில் உலகின் முன்னனி நிறுவனங்களில் ஒன்றான ஹீரோ மோட்டோகார்ப் இன்று ஹீரோ எக்ஸ்ட்ரீம் 160R ஐ அறிமுகம் செய்துள்ளது. இந்த புதிய ஹீரோ எக்ஸ்ட்ரீம் 160R, முதன்முதலாகக் கடந்த பிப்ரவரி மாதம் ஹீரோ வேர்ல்ட் 2020 என்ற நிகழ்ச்சியில் காட்சிப்படுத்தப்பட்டது. 1R கான்செப்ட் அடிப்படையில் இந்த பைக் வடிவமைக்கப்பட்டுள்ளது. PS 6 அப்கிரேடுடன் ஃபியூல் இஞ்ஜெக்ஷன், ஏர் கூல்டு வசதியுள்ள 160 cc எஞ்சின் இந்த பைக்கில் பொருத்தப்பட்டுள்ளது. இந்த எஞ்சின் 15bhp பவர் மற்றும் 14 Nm டார்க்கைத் தருகிறது. புதிய எக்ஸ்ட்ரீம் 160R பைக், 0 முதல் 60 கி.மீ வேகத்தை வெறும் 4.7 விநாடிகளில் அடையும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. `பிஎஸ் 6 அப்கிரேடுடன் ஃபியூல் இஞ்ஜெக்ஷன், ஏர் கூல்டு வசதியுள்ள 160 சிசி எஞ்சின் இந்த பைக்கில் பொருத்தப்பட்டுள்ளது’. முன் சக்கரத்தில் 276 mm பெடல் டிஸ்க் பிரேக்கும் பின் சக்கரத்தில் 220 mm பெடல் டிஸ்க் பிரேக்கும் பொருத்தப்பட்டுள்ளன. LED ஹெட்லைட், டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமண்ட் கிளஸ்டர், முன்பகுதியில் 13 mm டெலிஸ்கோபிக் ஃபோர்க்ஸ் மற்றும் பின்புறத்தில் 7 ஸ்டெப் அட்ஸ்ஜெஸ்ட் செய்யும் வகையிலான மோன...