Posts

Showing posts from June, 2020

கைவசமான ரத்தினக்கல்!’ -ஒரே இரவில் கோடீஸ்வரனான அதிசயம்

Image
வாழ்க்கையில் திடீரென ஏற்படும் திருப்புமுனையைக் கொண்டு ஒரே இரவில், ஒரே பாடலில் ஒரு நடிகர் பெரும் பணக்காரராக மாறுவதை பல்வேறு திரைப்படங்களில் பார்த்திருப்போம். ஏன்..? நம்மில் பலருடைய மனதிலும் `ஒரே இரவில் பணக்காரராக மாறினால் எப்படி இருக்கும்?' என்ற சிந்தனைகள் அவ்வப்போது தோன்றி மறைவது உண்டு. கனவிலும் திரைப்படத்திலும் காணும் இதுபோன்ற காட்சிகள் தான்சானியா நாட்டைச் சேர்ந்த ஒருவருக்கு நிஜ வாழ்விலேயே நடந்துள்ளது. அவரும் அந்நிகழ்வின் மூலம் ஒரே நாளில் கோடீஸ்வரர் ஆகியுள்ளார். ஆப்பிரிக்க கண்டத்தில், 6.2 கோடி மக்கள்தொகையைக் கொண்ட ஏழ்மையான நாடு தான்சானியா. இந்த நாட்டில் இருக்கும் சுரங்கங்களில் ரத்தினங்கள், தங்கம், வைரம் போன்றவை இயல்பாகவே கிடைப்பது வழக்கம். இருப்பினும் அந்நாடு ஏழை நாடாகவே இருந்து வருகிறது. இதுபோன்ற விலை உயர்ந்த பொருள்கள் கிடைக்கும் இந்நாட்டில் அதிகப்படியான பொருள்கள் மறைமுகமாக பலவழிகளில் கடத்தப்பட்டு வருகின்றன. இக்கடத்தலைத் தடுப்பதற்காக சுரங்கத்தை சுற்றிப் பெரிய அளவில் சுவரையும் எழுப்பியுள்ளது அந்நாட்டு அரசு. இந்நாட்டில் பெரும்பாலான மக்கள் தங்களுடைய வீட்டின் பின்புறங்களில் பள்ளம் தோ...